News January 23, 2025
போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தல்

கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நாகை பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நேற்று நடந்தது. அதில் நடுவராக இருந்த போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி, “வாகனங்கள் ஓட்டும்போது இளைய தலைமுறையினருக்கு நிதானம் அவசியம். வாகனங்களில் அலட்சியமாகவும், அவசரமாகவும், வேகமாகவும் பயணிக்க வேண்டிய தேவை இல்லை என அறிவுறுத்தினார்.
Similar News
News November 8, 2025
நாகை: கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு நவம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதிலிருந்து 34 வயது வரை உள்ளவர்கள், இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்விச்சான்று, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமைக்கான ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நாகை: ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகள் தொடர்பாக விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 8, 2025
நாகை: முதன்மை தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் குருப் 2A முதன்மை தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகின்ற 12ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


