News August 18, 2024

பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறப்பு

image

திருப்பூர், உடுமலை கச்சேரி வீதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை செய்தி துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். உடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 2, 2025

திருப்பூரில் தவறி விழுந்தவர் பலி

image

திருப்பூர், திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் ராமர்(54). இவர் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர் வீட்டு காது குத்து விழாவுக்கு சென்று விட்டு, ஆட்டோவில் திரும்பி வரும் போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 2, 2025

திருப்பூர்: What’s App இருக்கா உஷார்!

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 2, 2025

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் அதிரடி கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது‌. இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமார் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!