News February 17, 2025
பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்- கலெக்டர் அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.19ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் பிற்படுத்த உறுப்பினர்களுக்கு கடன் உதவி முகாம் நடைபெற இருக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
திருவாரூர்: இளைஞர்கள் உதவித்தொகை வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பப்படிவத்தை பெற்று நவம்பர் 30-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News October 23, 2025
திருவாரூர்: காவல்துறை அவசர கால உதவி எண்கள்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, “பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941 ஆகிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணுக்கும்; காவல்துறை உதவிக்கு 100-க்கும்; மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220 என்ற எண்ணுக்கும்; தீயணைப்பு துறை உதவிக்கு 101-ஐ தொடர்பு கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!