News September 28, 2024
பொம்மிடியில் ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்

தருமபுரியில் மிகப்பழமையான ரயில் நிலையமான பொம்மிடி ரயில் நிலையம் 1867ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தை புது பொலிவுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.15 கோடியே 18 லட்சம் மதிப்பில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், பயணிகள் காத்திருப்பு கூடம், 2000 பேர் நின்று ஏறக்கூடிய வகையில் நடை மேடைகள் தங்கும் விடுதி, உணவு விடுதிகள் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 23, 2026
தர்மபுரியில் அதிரடி கைது!

தொப்பூர் கணவாய் கட்டமேட்டில் நேற்று(பிப்.22) போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த 2 கார்களை சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ்குமார்(25), தேவாரம்(22) ஆகியோரை கைது செய்த போலீசார், சுமார் 500 கிலோ குட்கா பொருகளை பறிமுதல் செய்தனர்.
News February 23, 2026
தருமபுரி ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 22, 2026
தருமபுரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

தருமபுரி வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!


