News September 15, 2024
பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த அந்தஸ்து

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 5ஆவது முறையாக சிறந்த ஆற்றல் திறன் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த விருதை மத்திய அரசின் பிஇஇ செயலாளர் மிலின்ட் தியோர் வழங்கினார். இதில் இந்தியா முழுவதும் 507 நிறுவனங்கள் கலந்து கொண்டன, பொன்மலை ரயில்வே மத்திய பணிமனை இந்த விருதை தட்டி சென்றது. இந்த விருதை பெற காரணமாக இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் நன்றி தெரிவித்தார்.
Similar News
News November 25, 2025
திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

திருச்சி: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

சோமரசம்பேட்டையை அடுத்த கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் டேனியல் ஸ்டீபன் (32). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். டேனியல் ஸ்டீபன் கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.