News December 6, 2024
பொன்னேரி பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் கல்யாணசுந்தரம் தெருவில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.9 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்றும் (டிச.4) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 4, 2025
திருவள்ளூர்: இரண்டு அரசு பேருந்து மோதி விபத்து!

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பணிமனை அருகே, இரண்டு அரசு பேருந்துகள் (தடம் எண் டி 45 ஏ மற்றும் 212) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பயணிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


