News April 15, 2024
பொன்னேரியில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தீ தொண்டு நாளையொட்டி பணியின் போது பலியான தீயணைப்பு துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீர மரணம் அடைந்த வீரர்களை போற்றும் விதத்தில் தீயணைப்புத் துறையினர் அணியும் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள் கொண்டு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கு பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News November 21, 2025
திருவள்ளூர்: தென்கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள்!

ருவள்ளூர் மாவட்ட மக்களே..,தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1785 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. தனியாக தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 21, 2025
திருவள்ளூர்: வட மாநில தொழிலாளி பரிதாப பலி!

கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கட்டட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் கான்(27) என்பவர் நேற்று(நவ.20) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


