News April 22, 2025
பொன்னிசித்திரக்கடல் ஓவிய பயிற்சி சிறப்பு முகாம்

பொன்னிசித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் மாணவருக்கான கோடைகால சிறப்பு ஓவிய பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வு வருகின்ற 28/4/2025 திங்கள் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை உன்னை சித்திரக்கடல் ஓவிய பயிற்சி மையத்தில் நடைபெறும் 3-5 வகுப்பு ஒரே பிரிவாகவும் 6 -12 ஒரு பிரிவாகவும் நடைபெறும். பயிற்சி தொடக்க நாள் 1.5. 2025 முதல் 31/5/2025 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
நாகை மாவட்டத்தில் 13.8 செ.மீ மழை பதிவு

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழையின்றி மந்தமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள்: நாகப்பட்டினம் 3.6 செ.மீ, திருப்பூண்டி 1.9 செ.மீ, வேளாங்கண்ணி 2.4 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, வேதாரண்யம் 1.2 செ.மீ, கோடியக்கரை 1.0 செ.மீ என நாகை மாவட்டம் முழுவதும் மொத்தம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
News November 21, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில், சிறப்பு உதவி முகாம் வரும் நவ.22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 21, 2025
நாகை: வெளுத்து வாங்க போகும் மழை!

வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.21-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


