News April 15, 2024
பொன்னமராவதி அருகே விபத்து: சிறுவன் பலி!

பொன்னமராவதி, நெய்வேலி
கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(28). இவர் தனது மகன் தர்ஷனுடன் (2) அரசமலையில் பால் விநியோகம் செய்து விட்டு பைக்கில் திரும்பும்போது கோபி என்பவர் ஓட்டி வந்த பைக்கும் மோதியது. இதைப்போன்று மகாலெட்சுமி என்பவரின் பைக்கும் மோதிக்கொண்டது.
இதில் படுகாயமடைந்த மூவரில் சிறுவன் தர்ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Similar News
News December 17, 2025
புதுகை: சிறப்பு மேளா அறிவித்த அஞ்சல் துறை!

புதுகை மாவட்டத்திலிருந்து புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு குறைந்த கட்டணத்தில் பார்சல்கள் அனுப்ப சிறப்பு மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு மேளாவில் 56 அஞ்சலகங்களிலும் இவ் வசதி செய்யப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மேலும் தகவலுக்கு 98 65 54 66 41 என்ற எண்ணை அழைக்கலாம் என அஞ்சல் கோட்ட பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
புதுகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இச்சடி சாலையில் நேற்று அசோக்குமார் (49) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


