News April 8, 2025
பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம்.
Similar News
News April 26, 2025
இரவு ரோந்தில் இருக்கும் போலீசார் பற்றிய தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவலுக்கு இருக்கும் போலீசார் அவர்களைப் பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் எவையேனும் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மேலே உள்ள அட்டவணையை பார்க்கவும்.
News April 26, 2025
ராணிப்பேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ராணிப்பேட்டை அருகே பெருமூச்சி கிராம பேருந்து நிறுத்தம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 26, 2025
ராணிப்பேட்டையில் குழந்தை வரம் தரும் சிவன் கோயில்

ராணிப்பேட்டை ஓச்சேரியில் சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில் தரிசித்து இருப்போம், ஆனால் இந்த கோயிலில் தாமரை மலரில் நின்று காட்சி தருகிறார் . குழந்தை வரனுக்காக காத்திருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டினாள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.