News August 9, 2024
பொது விநியோகத்திட்டம் குறைதீர்வு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. எனவே மக்கள் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
திண்டுக்கல்: ஆதாருடன் பான் கார்டை இணைக்க எளிய வழி!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News October 31, 2025
நத்தம் அருகே கோர விபத்து; ஒருவர் பலி

நத்தம் அருகே சமுத்திராபட்டி பகுதியில், கணித போட்டிக்காக பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோவில் அரசு பேருந்து மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து நைனம்மாள் (43) உயிரிழந்தார். மாணவர்கள் திவ்யஶ்ரீ, குகன் உள்ளிட்ட 8 பேர் மற்றும் ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோர் நத்தம், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 31, 2025
பழனி: மாற்றுத்திறனாளிகளுக்கு கவனத்திற்கு!

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகாக்களில் இதுவரை அடையாள அட்டை, ரயில் & பஸ் பாஸ் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம் இன்று (31.10.2025) காலை 9 மணிக்கு பழனி அரசு மருத்துவமனையில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் நேரத்தில் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைக்கு 5 புகைப்படம், ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை, பஸ்/ரயில் பாஸுக்கு 3 புகைப்படம், ஆதார், மாற்றுத்திறனாளர் அட்டை தேவையாகும்.


