News August 8, 2024
பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்

கடலுார் மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் 10.8.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
கடலூர் மாவட்டத்தில் 2.46 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் , பண்ருட்டி , காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி என 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் SIR-க்கு முன் கடலூர் மாவட்டத்தில் 21,93,577 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 2,46,909 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 19,46,668 வாக்காளர்கள் மட்டுமே உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
கடலூர்: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!


