News April 18, 2025
பொதுமக்கள் தர்ம அடி வடமாநில வாலிபர் இறப்பு

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் வீட்டிற்கு இன்று பிற்பகலில், வந்த வட மாநில இளைஞர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்தபோது ஜெயலட்சுமி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து அடிக்க மயக்கமடைத்தார்.பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 9, 2025
பனை விதை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மூலம் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு வேளாண்மை வளாகத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 2000 பனை விதைகள் இன்று நடப்பட்டது அந்தியூர் பவானி கீழ்வாணி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
News November 8, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் உடல் நலக்குறைவாகவும் அல்லது சோர்வாகவும் இருக்கும் பொழுது வாகனம் ஓட்டுவதை தவிர்த்திடுவோம்.விபத்தில்லா பயணத்தை உருவாக்குவோம் என இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக விபத்து தடுப்பு விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
News November 8, 2025
ஈரோடு: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க)


