News June 26, 2024
பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (ஜூன்26) நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. காா்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
Similar News
News December 6, 2025
தி.மலை: மது விற்ற 2 பெண்கள் கைது!

வந்தவாசி அருகே தொள்ளார் பகுதியில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் ரோந்து பணி நேற்று நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் லைலா என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் கோட்டை காலனி பகுதியை சார்ந்த அமுல்ராணி என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனி மது விற்றால் கைது செய்வோம் என்று அறிவுத்தினர்.
News December 6, 2025
தி.மலை: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

கீழ்பென்னாத்தூர் வட்டம் மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (டிச.06) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை மங்கலம், நூக்காம்பாடி, எரும்பூண்டி, கொத்தந்தவாடி, மணிமங்கலம், பாலந்தல், இராந்தம், ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 6, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


