News May 21, 2024

பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை போலியாக பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவது தொடர்பாக மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காவலர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கிட்டப்பா அங்காடி பகுதியில் வழங்கி தகுந்த அறிவுரைகளை பொதுமக்களுக்கு கூறினர்.

Similar News

News April 20, 2025

சாலையோரம் காயங்களுடன் தவித்தவரை மீட்ட சமூக ஆர்வலர்

image

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நேற்று அடிபட்ட காயங்களுடன் ஒருவர் பல மணி நேரமாக அவதிப்பட்டு வந்தார். விசாரித்ததில் அவர் திருமணஞ்சேரியை சேர்ந்தவர் என தெரியவந்தது. தகவல் அறிந்த சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் மற்றும் சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களது செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

News April 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

image

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தங்கள் வாட்ஸ்அப்பிற்கு ஜியோ இன்டர்நெட் ஸ்பீட் 5ஜி நெட்வொர்க் என்ற பெயரில் ஏதேனும் APK கோப்பு வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் தொலைபேசி சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படும் காவல்துறை எச்சரித்துள்ளது. உறவினருக்காலுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 19, 2025

மயிலாடுதுறை இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை விண்ணப்பிக்க மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று இலவச படிவத்தை பெற்று கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை மே 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!