News May 8, 2024

பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

image

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களிலும், சட்ட உதவி மற்றும் சட்ட அறிவு பெறவும், பொதுமக்களுக்கு அவற்றை இலவசமாக எடுத்துரைப்பதற்காக 50 “சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குவார்கள் என  நீதிபதிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 22, 2025

ஜிம் உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த ஏப்.19ல் ஊக்க மருந்துகளை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் ஸ்டேஷனில் ஜிம் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை ஊக்க மருந்துகளாக கொடுக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 21, 2025

கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.

News April 21, 2025

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

image

தவெக பூத் கமிட்டி மாநாடு, வரும் 26,27 ஆகிய தேதிகளில், கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசவுள்ளார். இதில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விளக்கவுரை ஆற்றவுள்ளார்.

error: Content is protected !!