News March 3, 2025
பொதுமக்களிடம் இருந்து 710 மனுக்கள் பெறப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, கல்வி கடன் உள்ளிட்ட 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
Similar News
News November 18, 2025
தஞ்சை: செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செல்வி(35) என்பவர் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஒரத்தநாடு போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயன்றது அப்துல்கனி(31) என்பது தெரியவந்தது. செல்வி அளித்த புகாரின் பேரில், அப்துல்கனியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று மஞ்சல் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.18) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.