News April 28, 2025
பொதுமக்களிடம் இருந்து 710 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News April 29, 2025
குடிநீர் குறித்த பிரச்சனைகளுக்கு அழைக்க வேண்டிய எண்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அல்லது குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் குறித்த பிரச்சனைகள் மற்றும் அடிப்படை குடிநீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், RWS பிரிவு, தஞ்சாவூர் – 04362-292467 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News April 29, 2025
தஞ்சை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

தஞ்சை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அந்தந்த கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News April 29, 2025
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயக்கம் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.