News October 14, 2024
பொதுமக்களிடம் இருந்து 350 புகார் மனுக்கள் பெறப்பட்டன
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 350 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 20, 2024
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ட்ராமா ரெஜிஸ்ட்ரி அசிஸ்டன்ட்- 1 தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தற்காலிக வேலை என்றும், நிரந்தர பணி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய கல்வித்தகுதி உடையவர்கள் கல்விச்சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாள் 25 ஆம் தேதி.
News November 19, 2024
தஞ்சையில் பொது ஏலம் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். பொது ஏலமானது, 20ஆம் தேதி நாளை 10.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோர்ட் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
News November 19, 2024
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.