News February 17, 2025
பொதுமக்களிடமிருந்து 835 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 835 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
Similar News
News December 31, 2025
தஞ்சை மாவட்ட காவல் துறை அறிவிப்பு

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மது அருந்திவிட்டு வாகனங்களில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 94981-00805,04362-277466 புகார் தெரிவிக்கலாம். பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவித்துள்ளது.
News December 31, 2025
தஞ்சாவூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
தஞ்சை: 21,371 பேருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது 18 லட்சத்து 92 ஆயிரத்து 58 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், உரிய தகவல்களை அளிக்காத 21,371 பேருக்கு வாக்குப் பதிவு அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று நோட்டீஸ் வழங்குகின்றனர்.


