News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 4, 2025
காரைக்கால்: நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 7 தினங்களுக்குள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளையும், தெருவில் சுற்றி திரியும் பன்றிகளையும் அப்புறப்படுத்தி விடவேண்டும். விதிகளை மீறுவோர் மீது காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
News December 4, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


