News November 25, 2024
பொதிகை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 5, 2025
தென்காசி: மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி

கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்த சுடலை மகன் சர்வேஷ் (3). நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக அங்கிருந்த மின்மோட்டார் ரூமுக்கு சென்ற மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையம் போலீஸார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.5) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News December 5, 2025
தென்காசி: டிச.06 இங்கெல்லாம் கரண்ட் கட்!

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் செய்தி குறிப்பு. தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 06.12.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


