News January 2, 2025

பொங்கலுக்கு ரூ.5,000 கொடுத்தால் என்ன- ஜி கே வாசன் பேச்சு

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் பேசியது:இடைத்தேர்தல் வந்தால் கணக்கு பார்க்காமல் கொடுக்கும் கட்சி.பொங்கலுக்கு ரூபாய் 5000 கொடுத்தால் என்ன.மழை பாதிப்பில் சென்னை, திருவண்ணாமலை,புதுச்சேரி மக்களுக்கு ஒரு சிலருக்கு தான் நிவாரணம் என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஒத்த கருத்து என்பது தேர்தலில் மட்டும் ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்றார்.

Similar News

News October 17, 2025

திருச்சி: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

image

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் வீர மணிகண்டன் (32). லோடுமேன் ஆக பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது தாய் இறந்ததால், மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வீர மணிகண்டன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 17, 2025

திருச்சி: தமிழ் அறிஞர்களுக்கான அறிவிப்பு

image

தமிழக அரசு சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tamilvalarchithurai.org/agavai/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் வரும் நவ.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!