News December 6, 2024
பொக்காபுரம் கோயிலுக்கு மாவட்ட ஆட்சியர் வருகை

நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் புகழ்மிக்க கோவில்களில் ஒன்றான, மசினகுடி அருகே உள்ள சோலூர் பொக்கபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்துக்கொண்டார். சோலூர் கிராம மக்களின் பாரம்பரியக் கோவிலான, இந்த கோவில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
Similar News
News December 9, 2025
கூடலூர் அருகே சம்பவம் செய்த யானை!

கூடலுார் ஸ்ரீமதுரை அருகே, முதுமலையை ஒட்டி அமைந்துள்ளது போஸ்பாரா கிராமம். அவ்வப்போது இக்கிராமத்தில் இரவில் முகாமிடும் காட்டு யானை விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதிகாலை இப்பகுதியில் நுழைந்த காட்டு யானை, ஜோசப் என்பவரின் பூட்டிய கடையின் ஒரு பகுதியை சேதப்படுத்தி சென்றது. வனத்துறையினர், சேதமடைந்த கடையை ஆய்வு செய்து, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
News December 9, 2025
நீலகிரி: கன்றுகுட்டியை இழுத்து சென்ற ஆட்கொல்லி புலி!

முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனவல்லாவில் சமீபத்தில் ஆடுமேயத்த நபரை புலி தாக்கி கொன்றது. அந்த புலியை பிடிக்க, தானியங்கி கேமராக்களை வைத்தும், வனக்குழுக்கள் அமைத்தும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாவனல்லா குடியிருப்பை ஒட்டி தனியார் விடுதி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கன்றுக்குட்டியை புலி தாக்கி இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
நீலகிரி: இதை செய்தால் அபராதம்! எச்சரிக்கை

நீலகிரி: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவுப் பொருட்கள் பார்சல் செய்து கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


