News April 24, 2025

பைக் விபத்தில் ஐ.டி. ஊழியர் பலி

image

திருச்சியைச் சேர்ந்த தினேஷ், செங்கண்மால் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 23) நள்ளிரவு வேலை முடிந்து கேளம்பாக்கம் புதிய புறவழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளவந்தாங்கல் ரவுண்டானா அருகே சென்றபோது பைக் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News January 5, 2026

செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு அறிவுரை

image

செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்று இன்று (ஜனவரி-05) வெளியிட்டுள்ளது. நான் வெளியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நான் தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு அறிவுரை.

News January 5, 2026

செங்கை: Phone-இல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 5, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.<>gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!