News March 26, 2024
பைக் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (45), அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு தனது பைக்கில் பெருமாங்குப்பம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தார். இதில் படுகாயம்டைந்த பிரபுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Similar News
News December 9, 2025
வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

வேலூரில் 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காட்பாடி தாலுகா துணை தாசில்தார் துளசிராமன், காட்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த குமார், கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு தலைமை உதவியாளராகவும், வருவாய் கோட்ட துணை தாசில்தார் வாசுகி, கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவு கண்காணிப்பாளராகவும், இதேபோல் 8 பேர் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.
News December 9, 2025
வேலூரில் மலிவு விலையில் வாகனம்!

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 22ஆம் தேதி காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும் வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
வேலூர்: தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் நகை கொள்ளை!

வேலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மருதன், ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 6ஆம் தேதி இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 21 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று(டிச.8) காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


