News March 6, 2025

பைக் மீது வேன் மோதி புது மாப்பிள்ளை பலி

image

ஆரணி அருகே இரும்பேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த அப்பு (21) தனது நண்பர் ஆகாஷுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். அப்புவுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதமே ஆனது. ஆரணி தாலுகா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

தி.மலையில் கடன் தொல்லை நீக்கும் அதிசய கோயில்

image

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க

News December 5, 2025

தி.மலை பெண்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

error: Content is protected !!