News January 2, 2025
பைக் மீது மாடு மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரி (52), தனது மகன் சிவராமனுடன் நேற்று (ஜன.1) இருசக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து நந்தம்பாக்கம் சென்றார். அப்போது, மாடு ஒன்று திடிரென சாலையை கடக்க முயன்றபோது, சிங்காரி மீது மாடு இடித்தது. இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
காஞ்சிபுரத்தில் 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்! ஒருவர் கைது!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்மந்தமாக வழக்குபதிவு செய்யப்பட்டு ஓரிக்கை காந்திநகர் பகுதியை சேர்ந்த அப்பு (எ) பிரவீன்குமார் என்பவரை காஞ்சி தாலுகா போலீசார் இன்று (டிச.20) கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 1,200 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News December 20, 2025
காஞ்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
காஞ்சி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <


