News February 17, 2025
பைக் ஓட்டிய சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை?

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளையோர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் 10 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News October 16, 2025
BREAKING குமரிக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
குமரி: லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

குமரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News October 16, 2025
குமரி: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது

நேற்று அம்மாண்டிவிளை பகுதியில் தக்கலை மது விலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் வெளியே தோளில் பையுடன் நின்றிருந்த இருவரை சோதனையிட்டனர். அவர்கள் பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதைப்பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்றதாக தனியார் கல்லூரி 3ம் ஆண்டு மாணவர்களான தென்காசி மாவட்டம் சுனில் (21), செல்வகணேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.