News March 20, 2025

பைக்கில் புடவை சிக்கி பெண் உயிரிழப்பு

image

திருவாலங்காடு அருகே, ஜெகதீசன் மனைவி அருணாவுடன் மகளை சந்திக்க இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளார். பார்த்துவிட்டு ஊருக்கு  திரும்பி வரும்பொழுது, அருணாவின் புடவை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி, வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

முதியவர் மயங்கி விழுந்து பரிதாப பலி

image

திருத்தணி கமலா தியேட்டர் அருகே, 45 வயது மதிக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு உயர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரது அடையாளம் தெரியாததால் காவல்துறை விசாரித்து வருகின்றது.

error: Content is protected !!