News February 16, 2025
பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி உயிரிழப்பு

பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்.இவர் நேற்று திருக்கோவிலுார் – மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் உயிரிழந்தார். இது குறித்து நேற்று போலீசார் வழக்குப்பதித்தனர்.
Similar News
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: பாட்டி வீட்டில் தங்கிய மாணவர் விபரீத முடிவு!

தாரணாபுரியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (18). இவரது பெற்றோர்கள் பெங்களூரில் வேலை செய்து வரும் நிலையில், இவர் வடதொரசலூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், தனது வீட்டிற்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, உடலை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சிக்கு ஆரஞ்சு அலர்ட் – தொலைபேசி எண்கள் வெளியீடு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை (நவ.28) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி எண்கள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 04151-228801, 9445005243, கள்ளக்குறிச்சி- 04151-222449, சின்னசேலம் -04151-257400, சங்கராபுரம் – 04151-235329, வாணாபுரம் 04151-235400 ஆகிய எண்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: காவல்நிலையம் முன்பு திரண்ட கிராமம்!

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று (நவ.27) மாலை மூங்கில்துறைப்பட்டு இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதையறிந்த மூங்கில்துறைப்பட்டு காவலர்கள், இருதரப்பு இளைஞர்களையும் அழைத்து வந்து பேசிக்கொண்டிருக்கையில், மூங்கில்துறைப்பட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காவல்நிலையத்திற்கு வந்தனர். மேல்சிறுவள்ளூர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவலர்கள் தெரிவித்த பின்னர் கலைந்தனர்.


