News March 21, 2024

பைக்கில் சென்ற சர்வேயர் விபத்தில் சிக்கி பலி

image

செஞ்சி தலவாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (26). இவர் வானூர் தாலுகா அலுவலகத்தில் லைசென்ஸ் சர்வேயராக பணியாற்றிவந்தார். நேற்று இரவு வானூர்-திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் ஆகாசம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபொழுது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து வானூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Similar News

News August 30, 2025

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

image

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News August 30, 2025

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்.

image

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, விழுப்புரம் – நாகை இடையே செப்.8 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

News August 30, 2025

விழுப்புரம்: செப்.2 உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.2ம் தேதி கீழ்கண்ட இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
▶️ அரசினர் மேல்நிலைப்பள்ளி மழவந்தாங்கல்
▶️ நூர் மகால் திருமண மண்டபம், எதப்பட்டு
▶️ வள்ளி திருமண மண்டபம், கண்டமங்கலம்
▶️ பாபு JK மஹால், மட்டப்பாறை
▶️ KR திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ மங்களாம்பிகை திருமண மண்டபம், திருவெண்ணெய்நல்லூர்
பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்

error: Content is protected !!