News March 28, 2024
போக்குவரத்து காவல்துறையினருக்கு தொப்பி கண்ணாடி

திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.
Similar News
News December 2, 2025
தி.மலை: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <
News December 2, 2025
தி.மலை தீபத்திருவிழா: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தீபத் திருவிழாவையொட்டி இன்று முதல் டிச.5 காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தி.மலை வழியாக செல்லும் கனரக-இலகுரக வாகனங்கள் வந்த செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி, வேலூரில் இருந்து வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஆற்காடு, செய்யாறு வழியாக செல்லலாம். தி.மலை நகருக்கு உள்ளேயும், மாடவீதி, கிரிவலப் பாதையில் இருசக்கர வாகங்கள் செல்ல அனுமதி இல்லை.
News December 2, 2025
தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலையில் நாளை( டிசம்பர் 3) கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


