News April 23, 2025

பேர்ணாம்பட்டு அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

image

பேரணாம்பட்டு கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திவித் (23). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இவரது தம்பி சிபிராஜ் (21). திவித்திற்கு குழந்தைகள் இல்லாதது குறித்து அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிபிராஜ் தனது அண்ணன் திவித்தை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

வேலூர்: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். நாளையே (டிச.11) கடைசி தேதி. எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News December 10, 2025

வேலூர்: கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (டிச.10) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துகொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், துணை ஆட்சியர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News December 10, 2025

வேலூர்: எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

image

2026 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று(டிச.10) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!