News March 19, 2024

பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்.

image

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் . இவர் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என கேட்டு கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 3, 2025

சிங்காநல்லூர் Ex.MLA திமுகவில் இணைந்தார்

image

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சின்னச்சாமி திமுகவில் இணைந்துள்ளார். 2006 முதல் 2016 வரை சிங்காநல்லூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த சின்னச்சாமி திமுகவில் இணைந்திருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக கொங்கு மண்டலத்தை குறித்து வைத்து முக்கிய புள்ளிகளை தூக்கி வருகிறது.

News December 3, 2025

கோவை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

கோவை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News December 3, 2025

கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் டிச.13ம் தேதி அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். மேலும் விபரங்களுக்கு 8056358107. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!