News January 23, 2025
பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு செய்த அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழி தடங்களை நீட்டிப்பு செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பலூர்- குரும்பபாளையம் நகரப் பேருந்து கொட்டாரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை நேற்று தொடங்கி வைத்தார்.
Similar News
News October 15, 2025
பெரம்பலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News October 15, 2025
பெரம்பலூர்: மாணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவர் தனது படிப்புக்காக மடிக்கணினி (Laptop) வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். அந்த மாணவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அந்த மாணவருக்கு திடீர் பரிசாக ஒரு புதிய மடிக்கணினியை வாங்கி வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால், அந்த மாணவரின் தந்தை கண்ணீர் மல்க ஆட்சியருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
News October 15, 2025
பெரம்பலூர்: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்!

பெரம்பலூர், தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், குறைந்த ஒளியுடனும் மற்றும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையுடைய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.