News April 30, 2024
பேருந்து, லாரி மோதியதில் 14 பேர் காயம்
திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியில் இன்று தருமபுரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. லாரி மற்றும் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 24, 2024
நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் இன்று மாலை நான்கு மணி அளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அன்றாட பதிவேடுகளை பார்வையிட்டார். ஆய்வின் போது கஞ்சா உள்ளிட்ட குற்றங்களின் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
News December 24, 2024
12 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தாமலேரிமுத்தூர் ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் தலைமையில் இன்று நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 12 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சில இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2024
மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் முக்கிய அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரு சக்கர மற்றும் மூன்று சக்கர மற்றும் 20 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 243 வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி பொது ஏலமானது வரும் டிசம்பர் 30 ஆம் தேதி திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 மணிமுதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.