News April 25, 2025
பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தேனி அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (70). இவா், கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அம்பாசமுத்திரம் விலக்கு அருகே அரசுப் பேருந்து கோவிந்தசாமி மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான மயிலாடும்பாறை சோ்ந்த அஜீத்குமாா் (28) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Similar News
News April 26, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
News April 26, 2025
தேனி: வாலிபர் சடலம் மீட்பு

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ஜெயராமன் 64. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பாபு 40. இவர் ஆக்டிங் டிரைவர் வேலை செய்தார். இவருக்கு மது பழக்கம் அதிக அளவில் இருந்துள்ளது.7 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மேலச்சொக்கநாதபுரம் கழிவுநீர் ஓடையில் குடி போதையில் பாபு இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 25, 2025
தேனி : அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்
▶️தேனி உதவி இயக்குநா் 04546262729
▶️தேனி வட்டாட்சியர் 4546-255133
▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124
▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226
▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234
▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.