News January 24, 2025
பேருந்து நிலையத்தில் போலீஸ் வருவாய் துறை குவிப்பு

நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 19, 2025
மாவட்ட ஆட்சியர் படிவங்களை பெற்றுக் கொண்டார்

ஆர்க்காடு நகராட்சி கங்கையம்மன் கோயில் தெருவில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவ.18) தேதி பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு தீவிர சிறப்பு சுருக்க திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு அதை திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரே என்று வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெற்றுக் கொண்டார்.
News November 19, 2025
வாக்காளர் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாழைப்பந்தல் கிராமத்தில் இன்று நவ.18 ம் தேதி சிறப்பு தீவிர சுருக்க திருத்த படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறது . இந்த பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முறையாக செய்கிறார்களா என்று மாவட்ட ஆட்சிய சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதன் விவரங்களை தெரிவித்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
News November 19, 2025
ஆற்காட்டில் எஸ்ஐஆர் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா நேற்று ( நவ.18) ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கரிக்கந்தாங்கல் ஊராட்சி,குக்குண்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னகுக்குண்டி பகுதிகள், ஆற்காடு நகராட்சி ஆகிய பகுதிகளில் பூர்த்தி செய்த படிவங்கள் பதிவேற்றம் செய்வதை ஆட்சியர் பார்வையிட்டார்.


