News February 16, 2025
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

மதுரையில் இருந்து நேற்று (பிப்.15) முதுகுளத்தூர் சென்ற தனியார் பேருந்து மானாசாலை அடுத்துள்ள ஊசிலங்குளம் தனியார் பேப்பர் மில் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இந்த பேருந்தில் பயணம் செய்த மாயவேரி பூசாரியான ராமசாமி (72) என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
Similar News
News April 22, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல் 21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News April 21, 2025
ராம்நாடு எம்.பி மனு தள்ளுபடி

இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று ஏப்.21 பன்னீர் செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென நவாஸ்கனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கார்த்திகேயன், நவாஸ்கனியின் மனுவை தள்ளுபடி செய்து ஜூன்.16 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
News April 21, 2025
குறைதீர் நாள் கூட்டத்தில் 499 பேர் கோரிக்கை மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து 499பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, துணை ஆட்சியர் (பயிற்சி) கோகுல்சிங், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.