News October 11, 2024

பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

image

கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினரின் அனுமதியை பெற வேண்டும். கடந்த 2 நாட்களாக, பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பேரிஜம் ஏரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 11ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 20, 2024

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

News November 20, 2024

திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அவசர ஊர்திக்கு வழி விடுவோம், உயிரை காப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

திண்டுக்கல்: மாடு வளர்ப்பாளர்களுக்கு கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் (ம) வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை சாலைகளில் திரிய விட்டால் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். முதல் முறை பிடிபட்டால் மாடு ஒன்றிற்கு ரூ.2000மும், 2ஆம் முறை ரூ.5000மும் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.