News April 8, 2024
பேராவூரணியில் உலக சாதனை நிகழ்வு

பேராவூரணியில் சமூக ஆர்வலரான தக்ஷிணாமூர்த்தி 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென தனது ஆள்காட்டி விரலை பின்புறமாக மடக்கி உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரி நாகராஜன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 82 வினாடிகளிலேயே 100 தடவை ஆள்காட்டி விரலை மடக்கி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
Similar News
News May 8, 2025
தஞ்சாவூரில் அரசு கல்லூரியில் சீட் வேணுமா ?

12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று (மே 08) வெளியாகவுள்ளது. கல்லூரிகளில் நேரடியாக செல்வதற்கு பதிலாக, தற்போது இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். 12th Result வெளியாகும் நிலையில் அனைவருக்கும் SHARE செங்க.
News May 7, 2025
தஞ்சாவூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It
News May 7, 2025
தஞ்சாவூர்: அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செயவும்.