News December 31, 2024
பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜன.05ஆம் தேதி காலை 6 மணிக்கு “பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம்” நடைபெறும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3ம் பரிசாக ரூ.2,000 மற்றும் நான்கு முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News November 13, 2025
சேலம்: ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கிகரிக்கப்பட நிறுவனம் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த தாட்கோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 23 வயதிற்குட்பட்டவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், வெளிநாட்டில் கல்வி கற்க உதவி புரியும் எனவும் 18 முதல் 35 வயது உடையவர்கள் பங்கேற்கலாம் எனவும் செலவுகளை தாட்கோ நிறுவனம் ஏற்கும் எனவும் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 13, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

நாளை மின் பராமரிப்பு காரணமாக சிங்கிபுரம், வாழப்பாடி, தெடாவூர், கூடமலை, தலைவாசல், தம்மம்பட்டி, அறகளூர், துக்கியாம்பாளையம், பேளூர், முத்தம்பட்டி, மங்களபுரம், கிருஷ்ணாபுரம், மண்மலை, பாலகாடு, கடம்பூர், கூலமேடு, கெங்கவல்லி, புனல்வாசல், வீரகனூர், ஓதியத்தூர், லத்துவாடி, ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி, புத்தூர், உலிபுரம், நாரைகிணறு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


