News April 27, 2024
பேபி புடலங்காய் விலை உயர்வு
கம்பம் அருகே உள்ள காமயவுண்டன்பட்டி நாராயணதேவன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மூலம் புடலங்காய் முட்டைக்கோஸ் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பேபி புடலங்காய் தற்போது நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயி சங்கிலி தெரிவித்தார். கிலோ மூன்று ரூபாய்க்கு எடுத்து வந்த நிலையில் தற்போது கிலோ ரூபாய் 15க்கு வாங்கி செல்கின்றனர் என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
Similar News
News November 20, 2024
மாற்றுத்திறனாளி அட்டை வழங்க முகாம் – ஆட்சியர்
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்குவதற்கான மருத்துவ முகாம் நாளை (நவ.21) சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தேவையுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
தேனியில் இலவச போட்டோகிராஃபி பயிற்சி
தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச போட்டோ & வீடியோ கிராஃபி பயிற்சி வருகின்ற டிச.2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30.11.2024 தேதி கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 04546-251578, 9500314193, 9043651202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *பகிரவும்*
News November 20, 2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.