News August 18, 2024
பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சுருளோட்டில் 25.4 மி.மீ மழையும், சிற்றாறு மற்றும் பேச்சிப் பாறை அணைப்பகுதியில் தலா 23 மி.மீ மழையும், பாலமோரில் 20 மி.மீ மழையும் பெய்துள்ளது. மழையின் காரணமாக பேச்சுப் பாறை அணைக்கு 800 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 243 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
Similar News
News December 7, 2025
குமரி: ரயில் பயணிகள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாளை பகல் 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாளை (டிச.8) தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிச.9 அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவில்வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
News December 7, 2025
குமரியில் அடிக்கடி மின்தடையா? கவலை வேண்டாம்..!

குமரி மக்களே.. மழை உள்ளிட்ட பல்வேறு சமயங்களில் நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே 9498794987 என்ற எண்ணுக்கு கால்செய்து உங்கள் ஏரியாவில் எங்கு மின்தடை என தெரியப்படுத்துங்க. உடனே மின்சாரத் துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க செய்வார்கள். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (டிச.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 43.29 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 68.24 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 11.55 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 11.64 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 568 கனஅடி, பெருஞ்சாணிக்கு 213 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.


