News April 7, 2025
பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.
Similar News
News July 8, 2025
அரசு வேலை தேடுவோருக்கு அரிய வாய்ப்பு!

ஈரோடு: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு ஈரோட்டில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
News July 8, 2025
கூலி தகராறில் பெயிண்டர் கொலை: ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு, அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஆண்டவர்(55). இவரிடம் வேலை பார்த்து வந்த சதீஷ் (38) என்பவர்,நேற்று முன்தினம் தனக்கு தர வேண்டிய கூலி ₹2,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ், ஆண்டவரின் நெஞ்சுப் பகுதியில் அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ஆண்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை!
News July 8, 2025
ஈரோடு: திருவிழா பூச்சாட்டுதலுடன் ஆரம்பம்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமம் சேகண்டியூர் பகுதியில் அமைந்துள்ள குட்ட முனியப்பன் கோவில், ஆடி 1 பொங்கல் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த, குட்ட முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.