News April 7, 2025
பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.
Similar News
News September 16, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்கள், லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பாரங்கள் ஏற்றுவது வாகனத்தை பழுதாக்குவதோடு விபத்து ஏற்படவும் காரணமாகிறது. எனவே பாரங்கள் ஏற்றி செல்வது, எடையின்
அளவு குறித்த விதிகளை எப்போதும் பின்பற்றுவோம் என மாவட்ட காவல்துறையினர் சார்பில் போலீசார் தெரிவித்தனர்.
News September 16, 2025
ஈரோடு வருகிறார் தவெக விஜய்!

ஈரோடு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பயணத்தின் அடுத்த கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகின்ற 04/10/2025 அன்று வரவிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரின் மக்கள் சந்திப்பிற்கு உரிய பாதுகாப்பும் அனுமதியும் வழங்குமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதாவிடம் ஈரோடு மாவட்ட தவெக செயலாளர் பாலாஜி தலைமையில் இன்று
(செப்.16) மனு அளிக்கப்பட்டது.
News September 16, 2025
ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!

சத்தியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அம்மாசை தலைமையிலான காவல்துறையினர் ஜெய்சக்திமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 4 பேர் வட்டமாக அமர்ந்து பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தை சேர்ந்த நடராஜ், முனுசாமி, ராஜா, வேலுச்சாமி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.