News January 22, 2025
பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 19, 2025
செங்கல்பட்டு வைரல் லிங்க்; காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு மாநகர காவல் துறை எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசு ரூ.30,000 வழங்கும் திட்டம் என மோசடி லிங்க் உடன் போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது போன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம். போலியான லிங்க் மோசடிக்கு வழிவகுக்கும் எனவும், இது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று காவல்துறையும் எச்சரித்துள்ளது.
News December 19, 2025
BIG BREAKING: செங்கல்பட்டில் 7,01,901 வாக்காளர்கள் நீக்கம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7,01,901 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 20,85,464 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
News December 19, 2025
செங்கல்பட்டு:கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


