News April 24, 2025
பெரிய கோவிலில் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு

ஜம்முகாஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோபுர வாசலில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News July 8, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

தஞ்சை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
தஞ்சை மாவட்டத்தை பற்றிய தகவல்

தஞ்சை மாவட்டம் என்பது வரலாற்றிலேயே மிக முக்கியமான மாவட்டமாகும். இதில் இன்றைய தஞ்சாவூர் மாவட்டம் 3 கோட்டங்களையும், 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 589 கிராம பஞ்சாயத்துகளையும் கொண்டுள்ளது. மேலும் 620 கிராமங்களையும், 2 மாநகராட்சிகளையும், 1 நகராட்சிகளையும், 507 அஞ்சலகங்களையும், 53 காவல் நிலையங்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாத நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று 8ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.