News November 25, 2024
பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பெரியார் விருது பெற தேதி டிச.20 ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
தமிழ்நாடு சீருடை பணியாளர் மாதிரி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB PC/SI தேர்விற்கான மாதிரி தேர்வு வரும் அக்.25 நாளை காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் TNUSRB PC HALL TICKET, புகைப்படம் 2, ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9952493516ல் அணுகவும்.
News October 25, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்-24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை நிலவரம்

இன்று (அக்-24) ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 273.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் 96 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 24.87 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


